Monday, 12 May 2014

ராணி - கி - வாவ்

அவன் தான் அனுப்பினான். அந்த படம் என்னிடத்தில் வந்தது. ஏன் அனுப்பினான்? எதற்காக வந்தது? தெரியவில்லை…! ஏதோ ஒரு வகையில் அந்த படம் என்னை சலனப்படுத்திக்கொண்டிருந்தது. அது அனுப்பியன் மேல் இருந்த நன்மதிப்பா…அல்லது அவன் கருத்துகளில் ஏற்பட்ட ஈர்ப்பா? விடை தேடும் முயற்சியை தள்ளிவைத்தேன். இணையத்தின் வாசலில் உலகம் ஒரு ஒற்றுப்புள்ளியாக காட்சித்தர வியந்துக்கொண்டேன். அவன் யாரோ எவரோ? அவனை குறித்து பல நேரங்களில் இதழில் குமிழும் புன்னகை இணையத்தின் தாக்கத்தை பறைச்சாற்றி சென்றது என்னுள்ளாக.